சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி: கொரோனாவால் பாதிப்பா?
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
84 வயதான சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் சவுதி அரேபியாவின் ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி உள்ளார். மேலும் மன்னராக முடிசூடிவதற்கு முன்பு இரண்டரை ஆண்டுகள் பட்டத்து இளவரசராகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் துணை பிரதமராகவும் இவர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சவுதி அரபிய மன்னர் சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பித்தப்பை வீக்கம் இருக்கும் காரணத்தினால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சவுதி அரேபிய மன்னருக்கு கொரோனா பாதிப்பு குறித்து அறிகுறி எதுவும் இல்லை என்றும் அதனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் அந்த செய்திகள் உறுதி செய்துள்ளன