திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (07:34 IST)

திடீர் மூச்சுத்திணறல்... நள்ளிரவில் நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அனுமதி..!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை கண்டறிந்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி முதலில் வெளியானது.

பின்னர் சில மணி நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆராத்யாவிற்கும்  திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உடனடியாக மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தாக்கம் அதிகமானதால் மூச்சு திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.