இஸ்லாமியர்கள் கிராமங்களை எரிக்கும் பௌத்தர்கள்
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிக்கின்றனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வாழும் ராகினேவில் உள்ள பாதுகாப்பு படை மையங்கள் மீது போராட்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வன்முறையில் சுமார் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசம் சென்றுள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வீடுகளை ராணுவ வீரர்கள், பௌத்தர்கள் எரிப்பது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும் இஸ்லாமியர்களும் இதே செய்தியை கூறியுள்ளனர்.