Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இஸ்லாமியர்களுக்கு நான் எதிரியே: டிரம்ப் திட்டவட்டம்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 23 டிசம்பர் 2016 (10:48 IST)
இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியே என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 
 
அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார். 
 
டிரம்ப் அதிபர் வேட்பாளராக இருக்கும் போதே அமெரிக்காவில் தீவிரவாதம் தலை துக்க இஸ்லாமியர்களே காரணம் என இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தார்.
 
இந்நிலையில் துருக்கியிலும், ஜெர்மனியிலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
மேலும் அமெரிக்காவிற்குள் இஸ்லாமியர்கள் நுழைய தடை விதிப்பது உள்ளிட்ட திட்டங்களில் இருந்து பின்வாங்க மாட்டார் என அமெரிக்க ஊடகங்கள் கூறிவருகின்றனர்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :