வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (21:28 IST)

இந்தியா மீது 10 சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கை

இந்தியா, பாகிஸ்தான் மீது ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினால் அதற்கு பதிலடியாக இந்தியா மீது நாங்கள் பத்து சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் கூறியதாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டலின் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆசிப் கஃபூர், 'சமீபத்தில் பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடந்துள்ளதாகவும், அங்கு பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதாகவும், ஆனால் பாகிஸ்தானில் நடந்துள்ள இந்த நல்ல மாற்றங்கள் குறித்து எந்த வெளிநாட்டு ஊடகங்களும் எழுதவில்லை என்றும் குறை கூறினார்.

பாகிஸ்தானை எப்போதும் எதிர்மறையாக சித்தரிப்பதை மாற்றி இனிமேலாவது நல்ல விஷயங்களையும் எழுத வேண்டும் என்று ஆசிப் கஃபூர். கேட்டுக் கொண்டார்