சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (08:47 IST)

ஏழைநாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி! – முன்வந்த நியூஸிலாந்து!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடுமையாய் உள்ள நிலையில் ஏழை நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குவதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஏழை நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகள் தடுப்பூசிகளை பிற நாடுகளிடமிருந்து விலை கொடுத்து வாங்குவது சிரமம் என்பதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா சபை இணைந்து ஹவி தடுப்பூசி கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.

உலகில் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் முதலாவதாக ஏழை நாடுகளுக்கு 8 லட்சம் தடுப்பூசிகளை வழங்க நியூஸிலாந்து முன்வந்துள்ளது.

கோவாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 8 லட்சம் தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் தெரிவித்துள்ளார்.