இரண்டாவது முறையாக பிரதமர் ஆன ஜசிந்தா ஆர்டெரன் – நியுசிலாந்து தேர்தல் முடிவுகள்!

Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (16:52 IST)

நியுசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெரன் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார்.

கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 19 அன்று நடைபெறுவதாக இருந்த நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் ஒரு மாத கால தாமதத்துக்குப் பின்னர் அக்டோபர்
17ஆம் தேதியான இன்று நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தாராளவாத தொழிலாளர் கட்சி
கிட்டதட்ட வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஜசிந்தா ஆர்டெரன் இரண்டாவது முறையாக பதவிஏற்க உள்ளார்.
இதுவரை 87 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி 48.9 சதவிகித வாக்குகளையும், தேசியவாத கட்சி 27 சதவிகித வாக்குகளையும் பெற்றது.இதில் மேலும் படிக்கவும் :