பூமி கதை திருட்டு பஞ்சாயத்து – உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்த கதாசிரியர்கள் சங்கம்!

Last Modified சனி, 17 அக்டோபர் 2020 (15:27 IST)

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் அளித்துள்ள புகார் சம்மந்தமாக கதாசிரியர்கள் சங்கம் விசாரணை நடத்தியுள்ளது.

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தற்போது விசாரணை செய்து வருகிறார். உதவி இயக்குனரின் கதையை முழுமையாக படித்த இயக்குனர் பாக்யராஜ், பூமி படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் ‘பூமி’ படத்தின் ஸ்கிரிப்ட் முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே தன்னால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த பஞ்சாயத்தை விசாரித்த கதாசிரியர்கள் சங்கம் இப்போது உதவி இயக்குனர் கார்த்தியின் புகார் உண்மைதான் என்று கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து இந்த கதை கார்த்தியின் கதை என சங்கத்தின் உறுப்பினர்க்ள் 9 பேர் கையெழுத்திட்டு கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் கார்த்திக்கு நியாயம் கிடைப்பதற்கானா வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :