மோடி பூதத்தை கிளப்பி விட்டிருக்கிறார்: காஷ்மீரில் இம்ரான்கான்!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி பெரும் பூதத்தை மோடி கிளப்பி விட்டிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியுள்ளார்.
Imran Khan - Pakistan Prime Minister
நேற்று பாகிஸ்தானில் காஷ்மீர் ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்களிடையே பேசினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.
அப்போது பேசிய அவர் “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கி மிகப்பெரும் தவறை செய்துவிட்டார் மோடி. இதன் மூலம் இந்து தேசியவாதம் என்ற பூதம் வெளியே வந்துவிட்டது. இனி ஒருபோதும் மீண்டும் அதை குடுவைக்குள் அடைக்க இயலாது.
மேலும் 7 முதல் 10 நாட்களில் பாகிஸ்தானை அழித்து விடுவேன் என பேசுகிறார் மோடி பேசுகிறார். ஒரு சாதாரண மனிதர் கூட இப்படி பேச மாட்டார். காஷ்மீர் விவகாரத்திலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திருப்ப மோடி முயற்சிக்கிறார்” என்று பேசியுள்ளார்.