புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (13:28 IST)

ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற வீடியோ!

minecraft
யூடியூபில் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற வீடியோ குறித்து தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூபில் கோடிக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன என்பதும் அதில் லட்சக்கணக்கான வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான பார்வையாளர்களை பெற்று இருப்பது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மிகவும் பிரபலமான டெட்ரிஸ், மரியோ, ஜிடிஏ போன்ற கேம்களை கொண்ட மைன்கிராப்ட் வீடியோக்கள் யூடியூபில் ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
இந்த புதிய சாதனை படைத்துள்ளதை அடுத்து மைன்கிராப்ட் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர் முதல் பெரியோர் வரை தற்போது ஆன்லைனில் இந்த கேம்களை விளையாடி வருகின்றனர் என்பதும் அதனால் இது குறித்த வீடியோக்களை யூடியூபில் அதிகம் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.