செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:55 IST)

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ டிரைலர்: ஒரு மணி நேரத்தில் 3.5 மில்லியன் பார்வையாளர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 603 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியான நேரத்தில் புஷ்பா ட்ரைலர் வெளியாகவில்லை.
 
இருப்பினும் ஒரு சில மணி நேரங்கள் கழித்து ‘புஷ்பா’ டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ டிரைலர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தெலுங்கு மொழியில் மட்டுமன்றி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் ‘புஷ்பா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது என்பதும் அனைத்து மொழிகளிலும் இந்த படத்தின் டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்