தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவா இருக்கானே – வியக்க வைத்த சிறுவனின் செயல் !

Last Modified வெள்ளி, 13 டிசம்பர் 2019 (15:05 IST)
சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன் தாயின் மேல் மோதிய காரை எட்டி உதைக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

சீனாவின் சான்க்விங்க் நகரின் பரபரப்பான சாலையில்,  பெண் ஒருவர் தன் மகனுடன் நடைபாதையில் சாலையைக் கடந்து செல்கிறார். அப்போது சிக்னலைக் கவனிக்காமல் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கார் ஒன்று அந்த பெண்ணின் மேல் மோதுகிறது. இதில் நிலைகுலைந்து அந்த பெண் கீழே விழ சிறுவன் தன் தாயருகில் சென்று அவருக்கு என்ன ஆனது எனப் பார்க்கிறான். அவருக்கு அடி எதுவும் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் கோபமாக சாலையில் நிற்கும் காரை எட்டி உதைக்கிறான்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாக சிறுவனின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது சம்மந்தமான வீடியோக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :