திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 11 அக்டோபர் 2017 (12:41 IST)

ஓரினச்சேர்க்கையாளராக மாறிய ஜாக்கிசான் மகள்

பிரபல ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான் அவர்களின் மகள் எட்டா நங் என்பவர் ஓரினச்சேர்க்கையாளராகி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய துணை ஆண்டிஅட்டமன் (Andi Autumn) என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்



 
 
தனது துணையின் புகைப்படத்துடன் இந்த கருத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அவருடைய முடிவுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து அதை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் அவரும் ஆண்ட்டிஅட்டமன் ஆகிய இருவரும் இணைந்துள்ள அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
ஜாக்கி சானுக்கும் முன்னாள் ஹாங்காங் அழகி எலைன் நங் அவ்ர்களுக்கும் பிறந்த எட்டா நங் முடிவு குறித்து ஜாக்கிசான் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.