செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (14:31 IST)

இலங்கையில் இயங்கும் இந்திய ரயில்.. யாழ் தேவி ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி..!

இலங்கை சமீபத்தில் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருந்த நிலையில் இந்தியா தான் உதவி கரம் நீட்டி நாட்டு மக்களுக்கு உதவி செய்தது என்பதும் அதுமட்டுமின்றி இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஏராளமான வீடுகளையும் இந்திய அரசு கட்டிக் கொடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட யாழ் தேவி ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது அந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த ரயில் இலங்கையில் உள்ள அனுராதாபுரம் ரயில் நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை ரயில் நிலையம் வரை செல்லும் என்றும் 100 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவின் உதவியால் இயங்கக்கூடிய இந்த ரயிலால் அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran