புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (13:13 IST)

எலக்ட்ரானிக் கழிவுகளுக்கு உயிர் கொடுத்த இந்திய ஆராய்ச்சியாளர்!

இந்திய பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் எலக்ட்ரானிக் கழிவுகளை மக்களுக்கு உபயோகப்படும் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

 
 
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் வீணா சகஞ்வாலா. சுற்றுச்சூழலக்கு கேடு விளைவித்து கொண்டிருந்த எல்க்ட்ரானிக் கழிவுகளை, மக்களுக்கு உபயோகப்படும் பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார்.
 
கடந்து சில வருடங்களாக இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த தொழிற்சாலை மூலம் மொபைல் போன், டெப்லெட், மடிக்கணினி உள்ளிட்ட எலக்டரானிக் கழிவுகளை மக்களுக்கு பயன்படும் வீட்டு உபயோகப்படும் பொருட்களாக மாற்றலாம்.
 
மேலும், இது உலகத்தில் முதன் முறையாக எலக்ட்ரானிக் கழிவுகளுக்காக உருவாக்கப்படும் மைக்ரோ தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.