1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (16:03 IST)

சர்ச்சையை கிளப்பும் இம்ரான்கானின் 'சிவ அவதாரம்’!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இம்ரான் கானின் 'சிவ அவதார' புகைப்படங்கள் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவர் இம்ரான் கானை, இந்து மதக் கடவுளாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
இம்ரான் கானுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்துக்கொண்டு ஆளும் கட்சியின் உறுப்பினர்கள், இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்திவிட்டதாக பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் ரமேஷ் லால் தெரிவித்தார்.
 
முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகளைப் போன்ற நடவடிக்கைகளை இந்த கீழ்த்தரமான செயலை செய்தவர்கள்மீதும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.