டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: ஐ.நா கண்டனம்!
அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா கண்டனம்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராடி வரும் நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்ததாகவும் அவர்கள்தான் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெசின், அமைதியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற பல நிகழ்வுகளில் நாங்கள் சொல்வது அமைதியான போராட்டங்கள், சுதந்திரமான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அகிம்சை ஆகியவற்றை மதிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.