புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (21:20 IST)

பசிக்கு இலவச உணவு வழங்கும் ஓட்டல் முதலாளி : சுவாரஸ்ய தகவல்

அமெரிக்காவில் உள்ளா வாஷிங்டன் வெள்ளைமாளிக்கைக்கு அருகில் உள்ளது சாகினா ஹலால் கிரில் என்ற ஓட்டல்.  இந்த ஓட்டலின் அதிபர் பசி என்று வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்துவருகிறார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த காஸி மன்னான் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த உணவகத்தை நடத்திவருகிறார். அப்போதிலிருந்து பசி என்று வருவோர்க்கு இலவசமாக உணவு வழழங்குவதை ஒரு கொள்கையாக கொண்டிருக்கிறார்.
 
காஸி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இவர் இதுவரை 80 ஆயிரம் பேரும் இலவசமாக உணவு வழங்கியுள்ளார். 
 
மேலும் இவரது தற்போதைய இலக்கு ஆண்டுக்கு 16 ஆயிரம் பேருக்கு இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்பதுதானாம். இவரது நல்ல எண்ணத்துக்கு செயலுக்கு கருணை உள்ளத்துக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.