வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:12 IST)

இலவச பஸ் பாஸ்: வாரத்தில் 6 நாட்கள் ஊரை சுற்றும் பெண்மணி!

பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பஸ்பாஸ் எனக்கு அளிக்கப்பட்டதை அடுத்து பெண்மணி ஒருவர் வாரத்தில் ஆறு நாட்கள் பேருந்துகளில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி பென்னி. இவர் பெண் பென்சன் தாரர்களுக்கான இலவச பஸ் பாஸ் அரசிடமிருந்து பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பஸ் பாஸ் இருக்கும் காரணத்தினால் வாரத்தில் ஆறு நாட்கள் பேருந்திலேயே பல இடங்களுக்கு பயணம் செய்து ஊரை சுற்றி வருவதாக அவர் கூறியுள்ளார். பணம் எதுவும் கொடுக்காமல் 120 பேருந்துகளில் 3300க்கும் அதிகமான முறை பயணம் செய்ததாக மூதாட்டி தெரிவித்துள்ளார்
 
மேலும் தான் உயிர் உள்ளவரை இன்னும் பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.