புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (15:54 IST)

பேஸ்புக்கில் இணைந்த முன்னாள் பிரிட்டன் துணை பிரதமர்...

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் துணை பிரதமரான நிக்கிலஜ் பேஸ்புக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
கடந்த 2010 முதல் 2015 வரயிலான காலகட்டத்தில்  இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டேவிட் கேமரூனுக்கு துணைபிரதமராக பதவி வகித்தவர் நிக்கிலஜ் .
 
51 வயதாகும் நிக், யூரோப்பாவில் முக்கியமான  அரசியல்வாதியாக இருந்து புகழ் பெற்றவர்.
 
தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் நிறுவனரான மார்கூகர் பெர்க் தன் பேஸ்புக்கில் தளத்தில் நிக்கிலஜ்க்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேஸ்புக் விவரங்களை கையாளும் பிரிவு மற்றும் தொலைதொடர்பு பிரிவுக்கு அவர் தலைமை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.