1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (20:01 IST)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்; பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று மாலை 5மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6ஆக பதிவாகி உள்ளது.
 
இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பயத்தில் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 
 
டோக்கியோ, யோகோஹாமா உள்பட கண்டோ பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்க வில்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த நிலநடுக்கம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.