1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 ஜூலை 2018 (15:49 IST)

வினோத திருவிழா: எரிமலை மீது ஏறி வழிபடும் மக்கள்

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் பரோமா எரிமலை மீது மக்கள் ஏறி வித்தியாசமான சடங்கு செய்து வழிபட்டு வருகின்றனர்.

 
இந்தோனேசியா நாட்டில் உள்ள எரிமலைகளை காண சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் உள்ளது. ஒருவருடத்தில் சராசரியாக 30 மில்லியன் மக்கள் அந்த தீவை சுற்றி பார்க்க வருகிறார்கள்.
 
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் மக்கள் மவுண்ட் பரோமா எரிமலை மீது ஏறி காணிக்கை செலுத்துவார்கள். எரிமலை வெடிக்கும் நிலையில் இருக்கும் போது கூட அதன் மீது ஏறி வழிபாடு நடத்துவார்கள். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள டேன்ஜர் பழங்குடி மக்கள் காணிக்கை செலுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.
 
அந்த எரிமலையில் பயிர்கள், பழங்கள், காசு என்று வித்தியாச வித்தியாசமான காணிக்கைகளை செலுத்துவார்கள். அதேபோல் ஆடு, மாடு, கோழி என்று உயிருள்ள பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.