1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (12:12 IST)

கவுதமாலா எரிமலை வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு

கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது
 
கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு செந்நிற, 700 டிகிரி வெப்பம் மிகுந்த லாவா வெளியேறியது.
 
இதனால் அங்குள்ள வீடுகள் லாவாவுக்கு இரையாகின. மேலும், இந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் லாவாவில் சிக்கிக்கொண்டனர். இதில் இருந்து மக்களை காப்பாற்ற அங்குள்ள பேரிடர் மீட்பு குழு போராடி வருகிறது. நேற்று வரை எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69ஆக இருந்தது. ஆனால் தற்போது 72 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும் ஏராளமானோர் அங்கு காணாமல் போகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுற்றுத்தப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மீண்டும் அங்கு எரிமலை வெடித்துள்ளதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.