புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:25 IST)

ஆப்கன் குண்டுவெடிப்பு சம்பவம்… பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்ஹானின் காபூல் விமான நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே மற்றும் ஹோட்டல் பேரோனுக்கு அருகில் என இரு இடங்களில் நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் 80 ஆக இருந்த பலி எண்ணிக்கை இப்போது 90 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.