புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (18:43 IST)

20 மணி நேரம் வீடியோ கேம்: இளைஞரின் பரிதாப நிலை??

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பிரவுசிங் செண்டரில் வீடியோ கேம் விளையாடுவதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தற்போது அந்த இளைஞர் கோமா நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த மாதம் 27 ஆம் தேதி மாலையில் பிரவுசிங் சென்டரில் நுழைந்த இளைஞர் ஒருவர் வீடியோ கேம் விளையாட துவங்கினார். உணவு, நீர் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் மதியம் வரை கேம் விளையாடியுள்ளார்.
 
பின்னர், சுயநினைவு இழந்து நாற்காலியில் மயங்கி விழுந்தார். கை, கால்கள் அசையாமல் இருந்த அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வீடியோ கேம் விளையாடும் போது பாத்ரூம் மட்டுமே சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
 
மருத்துவமனை தீவிர சிகிச்சையில் இருக்கும் அந்த நபர் போதை பொருள் எதுவும் உட்கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.