கோமா நிலையில் குழந்தையை பெற்றெடுத்த பெண்!!
அர்ஜென்டினா சேர்ந்த பெண் ஒருவருக்கு அவர் கோமா நிலையில் இருந்த போது பிறந்த குழந்தை பிறந்துள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்தவர் அமேலியா பேனன், பெண் போலீஸ் ஆக பணிபுரிந்தார். இவரது கணவரும் போலீஸ் அதிகாரி.
கடந்த ஆண்டு கார் விபத்தில் படுகாயம் அடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். அப்போது அமேலியா பேனன் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர், அவருக்கு தனியாக ஒரு நர்சு பணி அமர்த்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோமா நிலையில் இருந்த அமேலியாவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
தொடர் சிகிச்சையால் அமேலியாவுக்கு சமீபத்தில் கோமா தெளிந்து, பழைய நினைவுகள் வந்தன.