வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:11 IST)

மீண்டும் சீனாவை மிரட்டும் கொரோனா! அதிகரிக்கும் எண்ணிக்கை

சீனாவில் மீண்டும் 100 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை அடைந்த சீனாவில் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதனால் அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது. பள்ளி, கல்லூரிகள், மால்கள், கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் திரையரங்குகளும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அங்கு மீண்டும் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பெய்ஜிங்கில் மட்டும் ஒரே நாளில் 99 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒரேநாளில் 108 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது சீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் மொத்தமாக 82160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 3341 பேர் பலியாகி, 77663 பேர் குணமாகி இருந்தனர். கொரோனா வைரஸை சீனா சிறப்பாக எதிர்கொண்டதாக உலக நாடுகள் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.