உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு உணவு கொடுத்து உதவும் சீனா!
உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு உணவு கொடுத்து உதவும் சீனா!
உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு சீனா உணவு கொடுத்து உதவி செய்வதாக முன்னணி ஊடகமொன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பதும் உக்ரைன் நாட்டிலுள்ள முக்கிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சீனாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்கள் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உக்ரைனில் போரிடும் வீரர்களுக்கு கெட்டுப் போகாத உணவுகளை சீனா அனுப்பி வைத்துள்ளதாக சிஎன்என் என்ற ஊடகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது