செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (11:03 IST)

பெற்றோருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள் - காரணம் என்ன?

பெற்றோர்கள் எந்நேரமும் செல்போனிலே மூழ்கி இருந்ததால் கடுப்பான குழந்தைகள் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
இன்றைய நவீன யுகத்தில் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்கின்றனர். இதனால் பல குழந்தைகள் தனிமையில் சிக்கி தவிக்கின்றனர். சரி வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்த பிறகாவது பிள்ளைகளிடம் நேரம் செலவழிக்கின்றனரா என்றால் இல்லை. வீட்டிற்கு வந்த உடனே செல்போனை நோண்டிக்கொண்டிருப்பர். இதனால் பல குழந்தைகள் பெற்றோரின் பாசம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
 
பெற்றோரின் செல்போன் மோகத்தால் கடுப்பான ஜெர்மன் நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் எமில் தன் வயதுடைய குழந்தைகளை சேர்த்துக் கொண்டு பெற்றோருக்கு எதிராக போராட்டம் நடத்தினான். பெற்றோர்களே செல்போனை விடுங்கள் என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய எமில் இனியாவது பெற்றோர்கள் செல்போனில் மூழ்குவதை தவிர்த்து குழந்தைகளை கவனிப்பார்கள் என நம்புவதாக கூறினான். போராட்டம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளார்கள் என்றால் இந்த குழந்தைகள் எவ்வளவு நொந்து போயிருப்பார்கள் என்று யோசியுங்கள். பெற்றோர்களே உங்களுக்கும் வேலை, டென்ஷன், கமிட்மண்ட்ஸ் எல்லாம் இருக்கு, எல்லாவற்றையும் விட குழந்தைகள் முக்கியம். அவர்களுக்காக தானே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். தயவுசெய்து பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.