1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (11:49 IST)

இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெற்றோர் தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்தவர் மகேந்திரன்(37). அவைன் மனைவி ரேவதி(27). இந்த தம்பதிக்கு சக்திவேல்(7) என்கிற மகனும் அக்‌ஷிதா (3) என்கிற மகளும் உள்ளனர். மகேந்திரன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவ்வபோது விடுமுறை பெற்று வீட்டிற்கு வந்து செல்வார் எனத் தெரிகிறது.
 
மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் 2 வாரங்களுக்கு முன்பே ஊருக்கு வந்த அவர், பாபநாசத்தில் ரேவதியின் தாயார் வீட்டில் தங்கி அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரேவதியின் தாயார் கதவை தட்டினார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. எனவே, ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டிற்குள் நால்வரும் விஷம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். 
 
கடன் பிரச்சனையில் அவர்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாங்களும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஒரே குடும்பத்தில் நால்வரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.