செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (08:02 IST)

ஆண்ட்ராய்டு செயலியாக அறிமுகம் ஆனது Chat GPT.. கூகுளுக்கு பாதிப்பா?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு அறிமுகமானது என்பதும் இந்த டெக்னாலஜியை மிக குறைந்த நாட்களில் 10 மில்லியன் பேர் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே Chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக வேலை வாய்ப்பு பறி போகிறது என்றும் கூகுளுக்கும் பாதிப்பு என்றும் கூறப்பட்டது. இதனால் தான் கூகுள் அவசர அவசரமாக பேர்ட் என்ற செயற்கை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது 
 
இந்த நிலையில் இதுவரை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த Chat GPT தற்போது மொபைலில் பயன்படுத்தும் வகையில்  ஆண்ட்ராய்டு செயலியாகவும் நேற்றுமுதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த செயலியை ஒரே நாளில் மில்லியன் கணக்கான டவுன்லோட் செய்துள்ளதாக கூறப்படுவதால் கூகுளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva