தமிழ் உள்பட 40 மொழிகளில் கூகுள் பர்ட்.. எத்தனை பேர் வேலை காலியாக போகுதோ?
ஏஐ டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த டெக்னாலஜியை பலரும் பயன்படுத்தி வருவதால் வேலைவாய்ப்பு பறிப்போகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது
இந்த நிலையில் கூகுளில் ஏஐ டெக்னாலஜியான பர்ட் ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வந்தது இப்போது இந்திய மொழிகள் ஆன தமிழ் உள்பட மொத்தம் 40 மொழிகளில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏஐ டெக்னாலஜி காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து வரும் நிலையில் தற்போது 40 மொழிகளில் கூடுதலாக இந்த டெக்னாலஜி வெளிவந்துள்ளதை அடுத்து இன்னும் எத்தனை பேர் வேலை பறிபோகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காளி ஆகிய இந்திய மொழிகளிலும் கூகுள் பர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சீனம், அரபு, ஜெர்மன், இத்தலியன், ஜப்பானிஸ், கொரியன், ரஷ்யன், உருது உள்ளிட்ட மொழிகளிலும் பர்ட் செயல்படுகிறது.
Edited by Siva