திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (08:54 IST)

தலைமறைவாக இருக்கும் கனடா பிரதமருக்கு கொரோனா!

பாதுகாப்பு காரணங்களுக்காக தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கனடாவிலுள்ள ஒட்டாவா நகரில் திடீரென லாரி டிரைவர்கள் பேரணி நடத்தியதன் காரணமாக தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இருப்பினும் ஆன்லைன் மூலம் தனது பிரதமர் பணியை தொடர உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது