வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (15:05 IST)

பீர் குடிங்க... நீரிழிவு & இருதய நோய்களை தவிர்த்திடுங்க!

பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 
பொதுவாக ஆல்கஹால் குடித்தாலே உடலுக்கு கெடுதி என்று கூறுகின்றனர். ஆனால் ஆல்கஹாலை அளவாக எடுத்து கொண்டால், நிச்சயம் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பீர் குடித்தால் நீரிழிவு, இருதய நோய்களை தடுக்கும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
 
23 வயதில் இருந்து 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 4 வாரங்கள் ஆல்கஹால் இல்லாத 330 மில்லி கிராம் பீரை குடிக்க வைத்தனர். இதன் முடிவில் பீர் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் குடல் நுண்ணுயிரிகளின் பன்முக தன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
ஆனால் ஆல்கஹால் கலந்த பீரை சாப்பிடுவதால் இந்த நன்மை எதுவும் கிடைக்காது என அவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.