1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 ஜூன் 2018 (16:32 IST)

ஆடி கார் சி.இ.ஓ அதிரடி கைது! காரணம் என்ன தெரியுமா?

ஜெர்மனியில் ஆடி கார் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் என்பவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிறுவனம் தயாரித்த கார் ஒன்று நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக புகையை வெளியேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஜெர்மனி நாட்டை தலையிடமாக கொண்டு உலகம் முழுவதும் கார்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று வோக்ஸ்வாகன். இந்த நிறுவனம் ஆடிக்கார் நிறுவனத்தின் தந்தையாக செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு வோக்ஸ்வாகன் நிறுவனம் தயாரித்த டீசல் கார் ஒன்று நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு கார்பன் டை ஆக்சைடு புகையை வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செய்யப்பட்ட சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இந்த நிறுவனத்தின் டிசல் கார் 40 மடங்கு அதிகளவு புகையை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டது.
 
இதனால் இந்நிறுவனத்தின் மீது கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து லட்சக்கணக்கான கார்களை திரும்ப பெற்றது. இந்த நிலையில் இன்று ஆடி கார் நிறுவனத்தின் சி.இ.ஓ ரூபெர்ட் ஸ்டாட்லெர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். சி.இ.ஓ மட்டுமின்றி இந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.