எங்க வேணாலும் போங்க.. அந்த நாடுகளை தவிர! – அமீரக மக்கள் இந்திய பயணத்திற்கு தடை!
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு வாய்ப்புள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பயணிக்க தன் மக்களுக்கு தடை விதித்துள்ளது அரபு அமீரகம்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை சில வாரங்கள் முன்னதாக தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது. தற்போது பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு குறைந்திருந்தாலும் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்டா ப்ளஸ் கொரோனாவும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்நிலையில் அமீரக மக்கள் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜூலை 21 வரை அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.