திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (18:13 IST)

வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்: விசாரணைக்கு உத்தரவு!

apple watch
வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்: விசாரணைக்கு உத்தரவு!
பயனாளர் ஒருவர் வாங்கிய ஆப்பிள் வாட்ச் வெடித்து சிதறியதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமெரிக்காவில் ஆப்பிள் வாட்ச் வாங்கிய ஒருவர் திடீரென தனது வாட்சின் பேட்டரி பெரிதாகி வெடித்து சிதறியதாக புகார் அளித்துள்ளார்
 
இதனை அடுத்து அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது தான் ஆப்பிள் வாட்ச்சை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அதிகமாக சூடானதாகவும் இதனையடுத்து வெடித்து சிதறியதாகவும் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து தகவல் அறிந்த ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran