1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (17:41 IST)

இனிமேல் ‘ஹலோ'வுக்கு பதில் ‘வந்தே மாதரம்' தான் கூறவேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு

phone
இனிமேல் அரசு ஊழியர்கள் தொலைபேசியில் பேசும்போது ஹலோ என்று கூறுவதற்கு பதிலாக வந்தேமாதரம் என்று கூற வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் ஹலோ என்று பேசுவதுதான் வழக்கமாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தொலைபேசி அழைப்பின் போது ஹலோ என்பதற்கு பதிலாக வந்தே மாதரம் என்ற கட்டாயம் கூற வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
மேலும் அலுவலத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் எனக் கூறி வணக்கம் செலுத்த வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva