வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:34 IST)

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவின் பரேக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் புகழ் பெற்ற ஐபோன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன் மட்டுமின்றி லேப்டாப், ஐபேட் என ல் தனக்கென தனி மார்க்கெட்டை ஆப்பிள் நிறுவனம் வைத்துள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் தனது புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கெவன் பரேக் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இவர் ஆப்பிளின் நிதி திட்டமிடல், பகுப்பாய்வு பிரிவின் துணைத் தலைவராக உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆப்பிள் நிர்வாகக் குழுவின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பை ஏற்று கொள்வார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கெவன் பரேக், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்  சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்று  தாம்சன் ராய்ட்டர்ஸ் கார்ப்பரேஷன்   மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட சில  நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தில் உலகளாவிய விற்பனை, சில்லறை வணிகம், சந்தைப்படுத்தல் நிதி ஆகியவற்றை வழிநடத்திய கெவன், இனி அடுத்த ஆண்டு முதல் புதிய தலைமை நிதி அதிகாரியாக பணிபுரியவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran