1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (15:44 IST)

எனது நிறுவனங்களில் ஐபோன் தடை செய்யப்படும்: எலான் மஸ்க் அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆப்பிள் நிறுவனம் மற்றும் ஓபன் ஏஐ ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்தால் எனது நிறுவனங்களில் ஐபோன் உள்பட ஆப்பிள் கருவிகள் அனைத்தும் தடை செய்யப்படும் என எலான் மஸ்க்  தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் , ஆப்பிள் மற்றும் ஓபன் ஏஐ நிறுவனங்கள் குறித்து கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 
 
இந்த நிலையில் ஆப்பிள் மட்டும் ஓபன் ஏஐ நிறுவனங்கள் இணைய முறைச்சியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 இந்த நிலையில் ஓபன் ஏஐ போட்டியாக எலான் மஸ்க், எக்ஸ் ஏஐ என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கிய நிலையில் தற்போது அவர் அதிரடியாக ஆப்பிள் மற்றும் ஓபன் ஏஐ இணைந்தால் தனது நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் கருவிகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran