1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (16:56 IST)

உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்த ஜோபைடன்.. ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!

joe biden
உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்த ஜோபைடன்.. ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து  சரியாக ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் உக்ரைனுக்கு திடீரென அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் விசிட் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 அமெரிக்க அதிபர் ஜோபடைன் திடீரென உக்ரைன் நாட்டிற்கு சென்று அந்நாடு  அதிபர் ஜோலன்சி மற்றும் அவருடைய மனைவியை சந்தித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் உக்ரைன் நாடு இதுவரை கேட்ட ராணுவ தளவாடங்கள் தொலைதூரம் தாக்கும் ஆயுதங்கள் ஆகியவற்றையும் அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரின் இந்த சந்திப்பு குறித்து கூறியபோது ’உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி ஓராண்டு முடிவடைந்து உள்ள நிலையில் நேரில் காணவந்துள்ளேன்
 
உக்ரைன் நாட்டின் ஜனநாயகம் இறையாண்மை ஆகியவற்றிற்காக அமெரிக்காவின் உதவி தொடர்கிறது என்று வலியுறுத்தவை நான் நேரில் வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எங்களை வீழ்த்த முடியும் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறான செயல் என்பதையும் உறுதிப்படுத்த வந்துள்ளேன் என்று ரஷ்யாவுக்கு அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 
 
 
Edited by Mahendran