1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (11:33 IST)

ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து அதிரடி முடிவு: என்ன காரணம்?

russian
ரஷிய தூதர்களை வெளியேற்ற நெதர்லாந்து அதிரடி முடிவு: என்ன காரணம்?
ரஷ்ய தூதர்களை உடனடியாக வெளியேற்ற நெதர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது. 
 
ரஷ்ய தூதர்கள் என்ற பெயரில் உளவாளிகள் நெதர்லாந்து நாட்டில் இருப்பதாகவும் எனவே ரஷ்ய தூதர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 
 
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நடந்த ஒரு ஆண்டாக போர் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போரை நிறுத்த இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தும் போர் தொடர்ந்து கொண்டு வருகிறது 
 
இந்த நிலையில் ரஷ்ய தூதர்கள் நெதர்லாந்தில்  எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அவர்களில் சிலர் உளவாளிகளாக இருக்கலாம் என்றும் நெதர்லாந்து டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இதனை அடுத்து நெதர்லாந்து நாட்டில் உள்ள ரஷ்ய தூதரகம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
நெதர்லாந்து நாட்டு மக்கள் மாஸ்கோவில் உள்ள தூதரக அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெதர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதர்கள் இரண்டு வார காலத்திற்குள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva