வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:26 IST)

சீனாவில் 90 கோடி பேருக்கு கொரொனா பரவவுள்ளது குறித்து அமெரிக்கா கருத்து!

சீனாவில்  நிலவும் கொரொனா பரவல் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

தற்போது  உலகில் கொரொனா தொற்று பரவல்  குறைந்து வரும் நிலையில், சீனாவில் கடன்டஹ் ஒன்றரை மாதங்களாக கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பெய்ஜிங்கில் தினமும் 2000 சடலங்கள் புதைப்படுவதாகவும்,  அடுத்த 90 நாட்களில் சுமார் 87 கோடிப் பேருக்கு கொரொனா பரவல் ஏற்படும் என்று  மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் விளைவால் தற்போது பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இது மற்ற நாடுகள் எப்போது  வேண்டுமானாலும் பரவ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் நெட் பிரைஸ், வைரஸின் தாக்கம் எல்லா இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும், இது வேகமாக மற்ற  நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ள்து என்றும், இது புதிய பாதிப்புகளையும் வைரஸின் உருமாறிகளையும் உருவாக்கலாம் என தெரிவித்துள்ளது.
 **