கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: இதுலயும் அமெரிக்கா முதலிடம்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று மாத காலங்களில் சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது சீனா உயிரிழப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், ஸ்பெயின், இத்தாலில் ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை கடந்த வராங்களில் உயர்ந்து சீனாவை தாண்டி விட்டன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
இதனால் எதிர்வரும் வாரங்களில் அமெரிக்காவில் உயிர்பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.