1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 ஜூலை 2018 (11:45 IST)

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்; 86 லட்சம் பொதுமக்கள் வெளியேற்றம்

ஜப்பானில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

 
ஜப்பான் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு பிறகு செய்து வரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
 
ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
 
வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதுவரை 86 லட்சம் பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 
 
மழைக்கு இதுவரை 249 பேர் பலியாகியுள்ளனர். பலரை காணவில்லை. மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் 70 ஆயிரம் பேர் வெளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் கடுமையாக உள்ளதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.