1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (12:47 IST)

மிரட்டும் பேய் மழை: ஸ்தம்பித்த மும்பை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் மும்பையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மும்பை ஸ்தம்பித்தது. 
 
மும்பை மட்டுமின்றி தானே, பால்கர், தாராவி உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகள் மேம்பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 
மும்பையில் கொலாபா பகுதியில் நேற்று இரவு 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், மும்பை, பால்கர், தானே ஆகிய பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு கருதி ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்படுகின்றன. பேருந்துகளும் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், கோவா, உத்தரகாண்ட், அசாம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்கிற காரணத்தால், தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.