திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (13:34 IST)

கொரோனா வைரஸ்; பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 1287 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறந்தவர்களில் அதிகமானோர் 80 வயதுக்கு மேலானவர்களே என கூறப்படுகிறது. எனினும் நோயினால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது.