புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (12:54 IST)

வேகமாய் பரவும் கொரோனா வைரஸ்: சீனா முக்கிய நடவடிக்கை!

சீனாவில் வேகமாக பரவி வரும் நோய் கொரோனா வைரஸ் தொற்று பலமடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 
மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ஊகான் நகரையும் தாண்டி இந்த வைரஸ் பரவி 830 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க, அந்த வைரஸ் நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்ட ஊகான் நகருக்கான போக்குவரத்து வசதியை சீன அரசு ரத்து செய்துள்ளது. 
 
நாளை சீன புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் துவங்க நிலையில் லட்சக்கணக்கானோர் சீனாவுக்கு வந்து போக இருப்பதால் நோய் தொற்று பலமடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது மேலும் பரவாமல் இருப்பதற்காக 5 நகரங்களில் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.