திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (15:46 IST)

ஐபோன் திருடர்களை கண்டுபிடித்தால் 5000 டாலர் பரிசு; குற்றத்தடுப்பு பிரிவு அறிவிப்பு

அமெரிக்காவில் 19000 டாலர் மதிப்புள்ள ஐபோன்களை திருடியவர்களை கண்டுபிடித்து கொடுத்தால் 5000 டாலர் பரிசு வழங்கப்படும் என குற்றத்தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

 
அமெரிக்காவில் இரண்டு நாட்களுக்கு முன் 19,000 டாலர் மதிப்புள்ள ஐபோன்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சியில் சிலர் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஐபோன்களை திருடிக் கொண்டு ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.
 
அதில் திருடியவர்கள் ஒவ்வொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட ஐபோன்கள் அனைத்தும் விலை உயர்ந்த ஐபோன் எக்ஸ் மற்றும் ஐபோன் 8 மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த திருடர்களை அடையாளம் காண்பிக்கும் அல்லது கண்டுபிடித்து தருபவர்களுக்கு 5,000 டாலர் பரிசாக வழங்கப்படும் என்று குற்றம் தடுக்கும் பிரிவு அறிவித்துள்ளது.