நாளை ரிலீஸில் மோதும் இரு படங்கள்; வெற்றி யாருக்கு..?

Last Updated: புதன், 11 ஜூலை 2018 (14:44 IST)
தமிழ் சினிமாவில் தற்போது வியாக்கிழமைகளில் படம் வெளியிடுகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களிடையே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரண்டு  படங்கள் இந்த வாரம் வெளியாவதால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். 'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில், சாயிஷா, சத்யராஜ், பானுப்ரியா, விஜி, ப்ரியா பவானிசங்கர் உள்பட ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. மற்றொன்று மிர்ச்சி சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன்  இயக்கத்தில் ஸ்பூஃப் காமெடி படமாக உருவாகியிருக்கிறது 'தமிழ்படம் 2'. இதன் முதல் பாகமான 'தமிழ்படம்', தமிழ் சினிமாவை கிண்டலடித்து வெற்றி பெற்றது.
 
‘தமிழ்படம் 2’ படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சிவாவின் இப்படம் நாளை திட்டமிட்டபடி ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாக  இருக்கிறது. ஏனென்றால், தயாரிப்பாளர் சங்கத்தின் முறையான அனுமதி பெறாமல் தயாரிப்பு நிறுவனம் பட வெளியீட்டு தேதியை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு கடந்த திங்கட்கிழமை யு சான்று வழங்கப்பட்டது. இதையடுத்து, அதே நாளில்  தமிழ்படம் 2க்கும் ஒரு சில வெட்டுகளுடன் யு சான்று வழங்கப்பட்டது.
இதனால் முதலில் சென்சார் வாங்கிய கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு அவர்கள் கேட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் அனுமதி வழங்கியது. ஆனால் தமிழ்படம் 2 படத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தின் முறையான அனுமதி பெறாமலேயே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இதனால் சிவா  நடித்துள்ள தமிழ்படம் திட்டமிட்டபடி ரிலீசாகும் பட்சத்தில், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்துக்கு பெரிய போட்டியாக இருக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :